அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் வெற்றிப் படங்களின் வசூல்

Amaran_Lucky_Bhasker_Movie_Sucess_1year

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கடந்த வருடம் (2024) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இரண்டு படங்கள், அமரன் மற்றும் லக்கி பாஸ்கர்.
இன்றுடன் இந்த இரண்டு படங்களும் திரையுலக வரலாற்றில் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளன.
இந்த பதிவில், நாம் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றிப் படங்களின் வசூல் விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அமரன் – வீரத்தின் கதை மற்றும் வசூல் சாதனை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம், கடந்த வருடம் (அக்டோபர் 31, 2024) வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம், மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் உண்மை வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவானது.

Box_Office_Collection_of_the_Hit_Films_Amaran_and_Lucky_Baskhar

உண்மைக் கதையை மையமாகக் கொண்டு வந்திருந்ததால், அமரன் படம் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெற்றிப் படங்களின் வசூல் விவரம் பார்த்தால், இந்த படம் மொத்தம் ₹340 கோடி வசூல் செய்து, 2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

லக்கி பாஸ்கர் – சினிமா ரசிகர்களை கவர்ந்த சாதாரண மனிதனின் அதிசயம்

அதேபோல், மலையாள திரையுலகில் கடந்த வருடம் இதே நாளில் வெளியான படம் லக்கி பாஸ்கர்.
வெங்கி அட்லுரி இயக்கத்தில், துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்த இந்த படம், ஒரு சாதாரண வங்கி ஊழியர் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி, பெரிய செல்வந்தனாக மாறும் கதை சொல்லப்பட்டது.

Box_Office_Collection_of_the_Hit_Films_Amaran_and_Lucky_Baskhar

லக்கி பாஸ்கர் படம் அதன் திரைக்கதை, துல்கர் சல்மானின் இயல்பான நடிப்பு, மற்றும் பிரமாண்டமான பின்னணி இசை காரணமாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் படி, இப்படம் மொத்தம் ₹120 கோடி வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அமரன் vs லக்கி பாஸ்கர் – ஒரு வருட வெற்றி கொண்டாட்டம்

இன்றுடன் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களும் திரையுலகில் ஒரு வருடத்தை எட்டியுள்ளன.
இரண்டுமே வெவ்வேறு கதையமைப்பில், தங்களது ரசிகர்களை வெற்றிகரமாக கவர்ந்துள்ளன.
அமரன் படம் உணர்வுகளும் வீரத்தையும் பேசும் கதை;
லக்கி பாஸ்கர் படம் ஆம்பிஷன் மற்றும் சமூக நிஜங்களைச் சித்தரிக்கும் கதை.

மொத்தத்தில், இந்த இரண்டு படங்களும் தென்னிந்திய சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்திய வெற்றிப் படங்களாக கருதப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *